வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக பாராட்டியிருப்பார் : சென்னை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசு நடவடிக்கையை கண்டிப்பாக பாராட்டி இருப்பார் என சென்னை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதா இல்லம் கையகபடுத்தப்பட்டதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி என்.சேஷசாயி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் குடியிருந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற சுற்றுச்சூழல் பாதிப்பு சான்றிதழ் எதுவும் தேவையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Comments