நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்

0 1661

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது.

முதல் அமர்வு ஜனவரி 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அன்றைய தினம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துவார். பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் முதல் அமர்வு நிறைவடையும். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் மாதம் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments