காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கம்

0 3719

பேட்டிங் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் கேஎல் ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக
மெல்போர்ன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கேஎல் ராகுலுக்கு இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.

இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் கேஎல் ராகுல் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதே போல இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் காயம் காரணமாக விலகி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments