அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்கள் 300 பேர் பங்கேற்க அனுமதி

0 3226
வருகிற 16 ஆம் தேதி நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 300 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற 16 ஆம் தேதி நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 300 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

குறைந்தபட்சம் 300 மாடுபிடி வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கவும், அவர்கள் சுழற்சி முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை களம் இறங்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான பதிவு, மாடுபிடி வீரர்களுக்கான உடல்தகுதி பரிசோதனை போன்றவை நடத்துவதற்கான தேதி குறித்து விரைவில் முடிவு செய்ய விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments