சென்னையில் பல்வேறு மேம்பாலங்களிலிருந்து மழை நீர்,சாலைகளில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

0 3297
சென்னையில் பல்வேறு மேம்பாலங்களிலிருந்து மழை நீர்,சாலைகளில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னையில் பல்வேறு மேம்பாலங்களிலிருந்து மழை நீர்,சாலைகளில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மாநகரில் இடைவெளியின்றி பெய்த மழையால், முக்கிய சாலைகளில் உள்ள மேம்பாலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலை , தியாகராய நகர் ஜி.என் செட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேம்பாலங்களில் உடைந்த வடிகுழாய்கள் வழியே சாலைகளில் மழைநீர் பாய்ந்ததால், அவ்வழியே பயணித்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்

மெட்ரோ ரயில் உயர்மட்ட மேம்பாலங்களில் தேங்கிய மழைநீரானது, பீறிட்டு சாலைகளில் கொட்டியது.

சில மெட்ரோ பாலங்களிலிருந்து விழும் நீரை அகற்றுவதற்கான குழாய்கள், சாலை மட்டத்திற்கே அமைக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments