இந்தோனேசியா நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய கிளைடர்
இந்தோனேசியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சுலவேசி (Sulawesi) கடலில் கிளைடர் ஒன்று மீனவர் வலையில் சிக்கியுள்ளது.
ஏவுகணை போன்ற அமைப்புடைய இந்த சாதனம் கடலில் புகைப்படம் எடுத்து அதன் தரவுகளை செயற்கைக்கோள் மூலம் அனுப்பும் திறன் உடையது என்று இந்தோனேஷிய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீருக்குள் செயல்படும் இந்த கிளைடர் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்ற ஆய்வும் நடைபெற்று வருகிறது.
Comments