கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பில்கேட்ஸ் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பில்கேட்ஸ், கொரோனா தொற்றை ஒழிக்க உலக நாடுகள் போராடி வரும் நிலையில், அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பூசி உற்பத்தி திறனில் இந்தியாவின் தலைமையைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதே போன்று கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கை தொடர்வதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானம் குறிப்பிட்டுள்ளார்.
Comments