மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக எவ்வித இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம் நீதிபதிகள்
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரியும் தாக்கலான மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை கேட்டபோது, மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதை அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
பொது நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கை நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments