மழைநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மழைநீர் முறையாக பயன்படுத்தாமல் கடலில் வீணாக கலப்பதை தடுக்க நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான பொதுநல வழக்கில், கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதையும், 2 ஆண்டுகள் கழித்து சென்னையில் மீண்டும் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நிபுணர்களை கலந்தாலோசித்தால் இந்த விவகாரம் சிறப்பாகக் கையாளப்படும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக தமிழக அரசு வருகிற 18ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.
Comments