கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் - மாநில எல்லையில் கால்நடைத்துறை சார்பில் சிறப்பு சோதனை சாவடி
கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் , அந்த மாநிலத்தையொட்டியுள்ள தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக எல்லைப் பகுதியான படந்தாலுமூடுவில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு, கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
அத்துடன் கோழி, வாத்து மற்றும் முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன
கோவை மாவட்ட எல்லைப்பகுதியான வாளையாறு, வேலந்தாளம், ஆனைக்கட்டி, வடக்குகாடு, உள்ளிட்ட 12 சோதனைச்சாவடிகளில் பறவைக்காய்ச்சலை தடுக்கும் வகையில் மாவட்ட கால்நடை துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
Comments