தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அரை சதவீதமாகக் குறைந்துள்ளது - சிஎம்ஐஇ தகவல்

0 3265
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அரை சதவீதமாகக் குறைந்துள்ளது - சிஎம்ஐஇ தகவல்

தமிழகத்தில் வேலையின்மை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாகக் குறைந்துள்ளதாக Centre for Monitoring Indian Economy என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய அளவில் நவம்பரில் 6.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பரில் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்கேற்ப வேலையின்மை விகிதம் குறைந்து வந்துள்ளது.

முழுஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரலில் வேலையின்மை விகிதம் 49.8 சதவீதமாக இருந்து, ஜூலையில் 8.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

செப்டம்பரில் 5 சதவீதமாகவும், அக்டோபரில் 2.2 சதவீதமாகவும், நவம்பரில் 1.1 சதவீதமாகவும் வேலையின்மை விகிதம் குறைந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை, தொழில்துறை, சேவைத்துறைகளின் பங்களிப்பு காரணமாக வேலையின்மை விகிதம் குறைந்ததாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments