விடுதியில் தங்கிய பிறகு கசந்த காதல்... திருமணத்துக்கு மறுத்த காதலன்!- நீதிமன்றம் படியேறிய சீரியல் நடிகை!

0 40347

திருமணத்துக்கு முன்னரே காதலருடன் தனிமையில் ஹோட்டலில் தங்கியதால், காதலர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக சீரியல் நடிகை ஒருவர் நியாயம் கேட்டு நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.

சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவரும் கீழ்கட்டளையை சேர்ந்த ராஜேஷ் என்பரும் காதலித்து வந்தனர். 2019 - ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 26- ஆம் தேதி சென்னை வட பழனி கோயிலில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமண அழைப்பிதலும் அச்சடிக்கப்பட்டு உற்றார் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. நிச்சயம் முடிந்து விட்டதால், இருவருமே அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. ஒரு முறை, நட்சத்திர ஹேட்டலில் ஈவன்ட் மேனேஜ்மென் நடத்தி வருவதாக கூறி இளம் பெண்ணை ராஜேஷ் விருந்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து, நமக்குத்தான் திருமணம் நடக்கப் போகிறதே என்று கூறிய ராஜேஷ், இளம் பெண்ணிடத்தில் தனிமையில் இருந்தாக தெரிகிறது.

ஆனால், அதற்கு பிறகுதான் ராஜேஷின் உண்மை முகம் தெரிய வந்தது. திடீரென்று, அவரிடத்தில் உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை ' என்று கூறி ராஜேஷ் திருமணத்துக்கு மறுத்துள்ளார். மேலும், 'இது பற்றி வெளியே தெரிவித்தால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு உன் சினிமா வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் . முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன்'என்றும் ராஜேஷ் மிரட்டியுள்ளார். நமது திருமணம் நடக்க வேண்டுமென்றால் மேலும் ரூ10 லட்சம் தர வேண்டுமென்றும் இளம் பெண்ணிடத்தில் ராஜேஷ் பணம் கேட்டுள்ளார். இதனால், பயந்து போன நடிகை தன்னால் முடிந்த 2.50 லட்சம் பணத்தை திரட்டி ராஜேஷிடத்தில் கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அவர், ராஜேஷ் குறித்து ஜே.ஜே. நகர் போலீஸ் நிலையத்தில் 2020- ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி புகார் அளித்தார். ஆனால், போலீஸார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜேஷ் பணம் கொடுத்து போலீஸரை சரி கட்டியதாக சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடிய இளம் பெண் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று கூறி மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் நடிகையுடன் சந்தோஷமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததாக ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments