தீவிரவாதிகளுக்கு உதவி : பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் அதிரடி முடிவு

0 8361

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீவிரவாதத்துக்கு உதவிவரும் பாகிஸ்தானுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் , பாகிஸ்தான் முக்கிய நேட்டோ அல்லாத நட்பு நாடக 2004 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகளுக்கு உதவிகளை செய்து வருவதாக பல்வேறு நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், பாகிஸ்தானிற்கு வழங்கப்பட்ட நேட்டோ அல்லாத நட்பு நாட்டுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மசோதா அமெரிக்க சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் பல்வேறு சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த சட்டம் அமலானால் வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் , பாகிஸ்தானை, முக்கிய நேட்டோ நட்பு நாடாக போதிய சான்றிதழ் இல்லாமல் நியமிக்க முடியாது.

ஆப்கானிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு செயல்படும் ஹக்கானி நெட்வொர்க் எனப்படும் தீவிரவாத அமைப்பு, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் துணை புரிவதாக சொல்லப்படுகிறது. ஹக்கானி நெட்வொர்க் அமைப்புக்கு உதவி செய்வதை பாகிஸ்தான் முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனை.

மேலும், ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் ஹக்கானி நெட்வொர்க் போன்று எந்த ஒரு தீவிரவாத அமைப்பின் நடமாட்டமும் இருக்கக்கூடாது என்பதையும் உறுதிசெய்யவேண்டும் . ஹக்கானி நெட்வொர்க்கின் மூத்த தலைவர்களை கைது செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற பிற நிபந்தனைகளும் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 17 நாடுகள் அமெரிக்காவால் முக்கிய நேட்டோ அல்லாத நட்பு நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளுக்கு , பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கான நிதியுதவி மற்றும் பரஸ்பர ராணுவ பயிற்சி போன்ற சலுகைகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டால் , சிறப்பு சலுகைகள் எதுவும் அந்த நாட்டுக்கு கிடைக்காது.

கடந்த 2018- ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கான நிதி மற்றும் பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அடுத்த ஆண்டே தென் அமெரிக்காவின் பிரேசிலை முக்கிய நேட்டோ அல்லாத நட்பு நாடாக டிரம்ப் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments