வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் 3 நாள் சுற்றுப் பயணம்... தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்த உள்ளதாகத் தகவல்
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை முதல் மூன்று நாட்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை செல்கிறார்.
மூன்று நாட்கள் இலங்கையில் இருக்கும் அவர் அந்நாட்டு அதிபர், பிரதமர், அமைச்சர்களுடன் பேச்சு நடத்த உள்ளார். அப்போது இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.
Comments