கேரளாவின் 2 மாவட்டங்களில் பரவி வரும் பறவைக் காய்ச்சல்- மக்களுக்கு எச்சரிக்கை
வாத்துக்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கேரள மாவட்டங்களான ஆலப்புழை மற்றும் கோட்டயத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆலப்புழா மாவட்டத்தில் வாத்துக்கள் அதிக எண்ணிக்கையில் கொத்து கொத்தாக செத்து மடிந்ததை அடுத்து, போபாலில் உள்ள விலங்கு நோய் ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு, பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தெரிவித்துள்ள மாநில கால்நடைத் துறை அமைச்சர் ராஜு, பறவைக் காய்ச்சலை பரப்பும் வைரசுகள் பரவாமல் இருக்க 50 ஆயிரம் வாத்துக்கள் கொன்று அழிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
2016 ல் ஆலப்புழை மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியதால் 2 லட்சம் வாத்துக்களும், கோழிகளும் கொன்றழிக்கப்பட்டன.
Comments