ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்தது
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி, உலக அளவில் முதன்முறையாக பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஆக்ஸ்போர்டிலுள்ள மருத்துவமனை ஒன்றில், 82 வயதான பிரையன் பிங்கர் என்ற நீரிழிவு நோயாளிக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. முதல் கட்டமாக 6 மருத்துவமனைகளில் 5 லட்சத்து 30 ஆயிரம் முதல் டோஸ் போடப்படுகிறது.
அடுத்த சில மாதங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் ஏற்கனவே பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி கடந்த மாதமே பயன்பாட்டுக்கு வந்து, சுமார் 10 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments