10 கோடி பேரின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டு விவரங்கள் திருட்டு..! பணப் பரிவர்த்தனை தளமான ஜஸ்பே மூலம் திருடப்பட்டிருக்கலாம் என தகவல்

0 3312
10 கோடி பேரின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டு விவரங்கள் திருட்டு..! பணப் பரிவர்த்தனை தளமான ஜஸ்பே மூலம் திருடப்பட்டிருக்கலாம் என தகவல்

10 கோடி பேரின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை திருடிய இணையத்தின் இருண்ட பக்கங்களில் ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான், மேக் மை டிரிப், ஸ்விக்கி உள்ளிட்ட இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணப்பரிவர்த்தனை தளமாக உள்ள ஜஸ்பே வழியாக இந்த விவரங்கள் திருடப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட்டில் சில விவரங்கள் பாதுகாப்பு குறைபாட்டுக்கு ஆளாகியிருக்கலாம் என ஜஸ்பே-வும் கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு மார்ச் முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள் திருடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவரங்களை இணையத்தின் இருண்ட பக்கங்களில் ஹேக்கர்கள் விற்பனைக்கு விட்டுள்ளதாகவும், கிரடிட்கார்டு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் இந்த விவரங்களை பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments