பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்குச் செலுத்திச் சோதிக்க அனுமதி
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்குச் செலுத்திச் சோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவுடன் இணைந்து தயாரித்த கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனை இப்போது நடைபெற்று வருகிறது. அதில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு மருந்தைச் செலுத்திச் சோதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சோதனைக்காக மருந்து செலுத்திக்கொண்டோரின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார்.
Comments