23 வயதுக்குள் 5 குழந்தைகள் ; இளைஞருடன் தகாத உறவு!- கணவரால் கொல்லப்பட்ட வட இந்தியப் பெண்

0 210923
கொல்லப்பட்ட சத்யாவின் சடலத்தை பார்வையிடும் போலீஸார்

கோவை அருகே தனது நண்பருடன் தகாத உறவு வைத்திருந்த 5 குழந்தைகளின் தாயை கணவனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கல்லுக்குழி அருகில் ஒண்டிகாரன் தோட்டம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் (26) என்பவர் தனது மனைவியான சத்யா (23) என்கிற ரூனுவுடன் வசித்து வந்தார். இந்த பகுதியில் தங்கி இவர்கள் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியின் வீட்டுக்கு அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவர் வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில், சுதர்சனின் மனைவி சத்யாவுக்கும் ரஞ்சித்துக்கும் பல மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதை அறிந்த சுதர்சன் தன் மனைவியை கண்டித்துள்ளார். ரஞ்சித்தையும் அழைத்து கண்டித்ததாக தெரிகிறது. ஆனால், சத்யா இதைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில், ரஞ்சித் தனது சொந்த ஊரான பீகாருக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்று விட்டார். சில தினங்களுக்கு முன்பு கோவை திரும்பிய  ரஞ்சித் மீண்டும் சுதர்சன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, சுதர்சனிடத்தில் நடந்தவற்றை எல்லாம் மறந்து நல்ல நண்பர்களாக இருப்போம் என்று ரஞ்சித் கூறியுள்ளார்.


சுதர்சன் சமாதானமடைந்ததை தொடர்ந்து ரஞ்சித், சுதர்சன், சத்யா மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், கோழிக்கறி வாங்க சுதர்சன் கடைக்கு சென்றுள்ளார். சுதர்சன் வீட்டுக்கு திரும்பிய போது ரஞ்சித்தும் சத்தியாவுக்கு சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சுதர்சன் அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித்துக்கும் பலத்த காயம் ஏற்பட , அவர் மயங்கி கீழே விழுந்தார். தொடர்ந்து, சுதர்சன் தலை தெறிக்க வீட்டிலிருந்து வெளியே ஓடினார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சுதர்சன் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது சத்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், ரஞ்சித் உயிருக்கு போராடுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக, சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிருக்கு போராடிய  ரஞ்சித்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, சூலூர் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சுதர்சனை போலீசார் தேடி வருகிறார்கள். தகாத உறவு காரணமாக சுதர்சனின் 5 குழந்தைகளும் இப்போது அனாதையாக தவித்து வருகின்றன. 

சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தகாத உறவு காரணமாக கொலைகள் அடிக்கடி நடைபெறுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments