பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் எல்லையில் இந்திய நிலைகளை நோக்கி நிறுத்தப்பட்டுள்ள சீன டாங்குகள்
எல்லைப் பதற்றத்தை அதிகரிக்கும் புதிய திட்டத்துடன், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவ சாவடிகளுக்கு முன்பாக சீனா தனது டாங்குகளை நிறுத்தி உள்ளது.
ரெசாங் லா, ரெச்சின் லா, முகோசிரி ஆகிய மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் 30 முதல் 35 ராணுவ டாங்குகளை சீனா நிறுத்தியுள்ளது.
இந்த இடங்கள் இந்திய ராணுவத்தால் கடந்த ஆகஸ்டில் தனது வசம் கொண்டு வந்தவைகளாகும். இந்திய நிலைகளை குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் டாங்குகள் இலகுரக நவீன ரகத்தை சேர்ந்தவை எனவும் கூறப்படுகிறது.
அதே நேரம் சீனா வாலாட்டினால் நமது ராணுவம் தக்க பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை தடுக்க 17 ஆயிரம் அடி உயரத்தில் நமது டாங்குகளும் நிறுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Comments