ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பறக்கும் இந்திய தேசிய கொடி!
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய தற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்பதை ஒட்டி அங்கு இந்திய தேசிய கொடி நிறுவப்பட்டுள்ளது.
இந்தியா, நார்வே, கென்யா, அயர்லாந்து, மெக்சிகோ ஆகிய 5 நாடுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.நா.கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர்களாக பதவி வகிக்க உள்ளன.
ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில், இன்று இந்திய தேசிய கொடியை ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி திருமூர்த்தி ஏற்றி வைக்கிறார்.
வரும் ஆகஸ்ட் மாதம் மற்றும் அடுத்த ஆண்டில் ஒரு மாதத்திலும் இந்தியா ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும்.
Comments