பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது
தமிழகம் முழுவதும் அரிசி பெறும் குடும்பஅட்டை வைத்திருப்போருக்குப் 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்துள்ள 2 கோடியே 9 லட்சத்து 91ஆயிரம் பேருக்கும், இலங்கைத் தமிழர்களின் 18 ஆயிரத்து 923 குடும்ப அட்டைகளுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, 5 கிராம் ஏலக்காய், முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை தலா 20 கிராம் ஆகியவற்றுடன் 2500 ரூபாயும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. டோக்கனில் குறிப்பிட்ட நாளில் நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பரிசுத் தொகுப்பைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி இந்தப் பரிசுத் தொகுப்பை வழங்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.
பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் வரிசையில் நின்று டோக்கன்களைக் கொடுத்துப் பரிசுத் தொகுப்பைப் பெற்றுச் செல்கின்றனர். வரும் 12ஆம் தேதி வரை ஒவ்வொரு ரேசன் கடையிலும் காலையில் நூறு பேருக்கும், பிற்பகலில் நூறு பேருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு வரும் 13ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
Comments