உடனடி கடன் வழங்கும் சீன செயலிகளின் பின்னணியை ஆராய்கிறது அமலாக்கத்துறை
உடனடி கடன் வழங்கும் சீன செல்போன் செயலிகளின் பின்னணியை ஆராய அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கின் விபரங்களை ஹைதராபாத் போலீசாரிடம் கேட்டுள்ளனர்.
கடன் வழங்கி கந்துவட்டி வசூலிப்பதாகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி கடன் பெற்றவர்களை தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் இரண்டு சீனர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மிரட்டல் வந்த செல்பேசி எண்கள் ஆய்வு செய்யப்பட்டு பணப்பரிவர்த்தனை செய்த வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
சுமார் 25 ஆயிரம் பேருக்கு 8 செயலிகள் மூலம் கடன் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள கால்சென்டரில் 8 ஆயிரம் ரூபாய்க்கு ஆட்களை அமர்த்தி ஆபாச வார்த்தைகளால் மிரட்டுவதற்கும் பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த செயலிகள் வழியாக குற்றத்தின் மூலம் பதுக்கிய பணம் வட்டிக்கு விடப்படுகிறதா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை முடுக்கி உள்ளனர்
Comments