இங்கிலாந்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று.. பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?

0 2752
இங்கிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமுடக்கம் அறிவிப்பதை பிரதமர் போரிஸ் ஜான்சன் தாமதப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பொதுமுடக்கத்திற்கு எதிராக நாட்டிங்ஹாம் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின் அங்கு தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரம் பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 50 ஆயிரத்தைக் கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments