கொச்சி- மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயு திட்டம்... நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
கொச்சி- மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயு திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 450 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த குழாய்வழி எரிவாயு திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம், நாள் ஒன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு, கொச்சியில் உள்ள எல்என்ஜி நிறுவனத்திலிருந்து எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை கடந்து கர்நாடகத்தில் உள்ள மங்களூருக்குச் செல்லும்.
Comments