சபரிமலை மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
சபரிமலையில் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தான தலைவர் வாசு திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.
மகர விளக்கு தினமான வருகிற 14ந் தேதி ஆன்லைனில் தரிசனத்திற்கான முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
முன் பதிவு செய்யாத அய்யப்ப பக்தர்களுக்கு கண்டிப்பாக தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் உள்பட கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ்களை பக்தர்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் தேவசம் போர்டு தலைவர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments