தடுப்பூசி ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உளமாற வரவேற்பு

0 2839
தடுப்பூசி ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உளமாற வரவேற்பு

கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதல் அளித்த அரசின் முடிவை உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர்.

தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரை பாராட்டி உள்ள அமித் ஷா,இது இந்தியாவின் சாதனை தருணம் என டுவிட் செய்துள்ளார். தடுப்பூசி கண்டுபிடிப்பில் உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், மனித சமூகத்திற்கு அவர்கள் செய்த இந்த சேவைக்காக நாடு அவர்களை எப்போதும் நினைவு கூறும் எனவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் நட்டா, பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் தடுப்பூசி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments