தடையை மீறி திமுக கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறது - ஜெயக்குமார்

0 2001

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கிராம சபை கூட்டங்களில் விடுக்கும் மிரட்டல்களுக்கு அதிமுக அரசு ஒருபோதும் அஞ்சாது என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் நடத்துவது கிராம சபையா அல்லது குண்டர் சபையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தரமணியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர், தடையை மீறி திமுகவினர் கிராம சபை கூட்டங்கள் நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments