அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து வீடு மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

0 1716

அமெரிக்காவின் மிச்சிகனில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீடு மீது மோதியதில், விமானி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

பெடரல் ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று Lyon பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் மோதி, தீ பிடித்தது.

வீட்டில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் அறையில் தங்கியிருந்ததால், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், அங்கிருந்த செல்லப்பிராணியான பூனை விபத்தில் சிக்கி உயிரிழந்தது. விமானி ஒருவரும், பயணிகள் 2 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments