சென்னையில் இருந்து அபுதாபிக்கு 46 பேருடன் புறப்பட்ட சிறப்பு விமானம் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிரக்கம்

0 2424
சென்னையில் இருந்து அபுதாபிக்கு 46 பேருடன் புறப்பட்ட சிறப்பு விமானம் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிரக்கம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து 46 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, அவசரமாக ஓடுபாதையிலேயே தரையிரக்கப்பட்டது.

38 பயணிகள் உட்பட 46 பேருடன் இன்று அதிகாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அறிந்த விமானி, உடனடியாக செயல்பட்டு அவசரமாக ஓடுபாதையிலேயே தரையிரக்கி, கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக இழுவை வண்டிகள் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வரப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர்.

விமானம் பழுது பார்க்கப்பட்டு இன்று இரவு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திரக் கோளாறை உடனடியாக அறிந்து, விரைந்து செயல்பட்டு தரையிறக்கிய விமானியின் சாதுர்யத்தால், 46 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments