50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

0 3321

50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள ஆசிரியர்களின் பட்டியலை ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பட்டியலை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் பட்டியலை இறுதி செய்யும் போது ஆசிரியர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments