கொரோனா தடுப்பூசி இயக்கத்தைத் தேர்தல் நடைமுறையைப் போல் வாக்குச்சாவடி நிலை வரை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹர்சவர்த்தன் தகவல்

0 1436
கொரோனா தடுப்பூசி இயக்கத்தைத் தேர்தல் நடைமுறையைப் போல் வாக்குச்சாவடி நிலை வரை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹர்சவர்த்தன் தகவல்

கொரோனா தடுப்பூசி இயக்கத்தைத் தேர்தல் நடைமுறையைப் போல் வாக்குச்சாவடி நிலை வரை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார்.

719 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் பங்கேற்கும் 57 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், தடுப்பூசி போடும் ஊழியர்கள் 96 ஆயிரம் பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பகுதிகளிலும் மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காகக் குளிர்பதனச் சேமிப்புக் கிடங்கு, தடையில்லா மின்சார வசதி ஆகிய ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை தவிர 19 அமைச்சகங்களும் 23 துறைகளும் தடுப்பூசி இயக்கத்தில் பங்காற்ற உள்ளதாக ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments