சதுர கி.மீ. அடிப்படையில் சிசிடிவி எண்ணிக்கையில் சென்னை உலகில் நம்பர் ஒன்!
உலக அளவில் நகர்ப்புறங்களில் நிறுவப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தவரை, சதுர கிலோமீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையுடன் உலகின் நம்பர் ஒன் நகரமாக சென்னை திகழ்கிறது.
அதற்கு அடுத்த இடத்தில், 480 கேமராக்களுடன் ஐதராபாத் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 289 கேமராக்களுடன் தலைநகர் டெல்லி 8 ஆம் இடத்தில் உள்ளது. முதல் 10 நகரங்களில் 6 இடங்களை சீன நகரங்கள் பிடித்துள்ள நிலையில், அதன் தலைநகரான பெய்ஜிங் 10 ஆம் இடத்தில் உள்ளது.
ஆனால் மொத்த எண்ணிக்கையில் 11 லட்சம் கேமராக்களுடன் இந்த நகரமே உலகின் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆசியா அல்லாத ஒரே நகரமான லண்டன் 399 கேமராக்களுடன் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.1942 ல் உலகில் முதலாவது சிசிடிவி கேமரா கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று 79 ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விட்டது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சிசிடிவிக்களை நிறுவியுள்ள முதல் இரண்டு நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments