சென்னையில் 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் 39 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைவு

0 2441

சென்னையில் 2019-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் சாலை விபத்துக்கள் 39 சதவீதம் குறைந்துள்ளதாக பெருகநர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 2020ம் ஆண்டில் நிகழ்ந்த 4 ஆயிரத்து 368 விபத்துக்களில், 846 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2019-ம் ஆண்டை  காட்டிலும் இறப்பு விகிதம் 45 சதவீதம் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 2020ம் ஆண்டில் சாலை விதிகளை மீறியதாக 28 லட்சத்து 70 ஆயிரத்து 296 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு தினமான கடந்த வெள்ளிக்கிழமை சாலை விதிகளை மீறிய 442 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments