திருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவாயில், கொடி மரம், பலிபீடத்தில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்க உள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றில் புதிய தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்க உள்ளது.
இதற்காக 3 கோடியே 13 லட்சம் ரூபாயில் 6.625 கிலோ தங்கம் உபயோகிக்கப்படுகிறது. 68 கிலோ செம்புடன் சேர்த்து தயார் செய்யப்படும் இந்த பணிகள் 2 மாதத்தில் முடிக்கப்பட உள்ளன.
தங்கத் தகடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்டதால் தற்போது அவை பொலிவிழந்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments