ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டி: பறந்து வந்த பந்தை பீர் கோப்பையில் கேட்ச் பிடித்த பார்வையாளர்!

0 6524
ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டி: பறந்து வந்த பந்தை பீர் கோப்பையில் கேட்ச் பிடித்த பார்வையாளர்!

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வீரர் அடிந்த பந்தை பார்வையாளர் ஒருவர் தனது பீர் கோப்பையைப் பயன்படுத்தி லாவகமாகப் பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டிகள் மெல்பர்ன் நகரின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகின்றன. அப்போது டி20 ஆட்டக்காரரான டேவிட் மலன், 16வது ஓவரில் அடித்த பந்து மைதானத்தின் இறுதி வரை சென்று சிக்ஸராக மாறியது.

ஆனால் அங்கு அமர்ந்து பீர் குடித்துக் கொண்டிருந்த ஒருவர் அந்தப் பந்தை தனது கோப்பையில் லாவகமாகப் பிடித்து, அதன் பின்னரும் விடாமல் பீர் அருந்தினார். இந்த நிகழ்வை மைதானத்திலிருந்த அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments