ராஜஸ்தானில் பரவுகிறது பறவைக் காய்ச்சல்? ஒரு வாரத்தில் 300 காக்கைகள், 52 மயில்கள் திடீரென மரணம்
ராஜஸ்தானில் ஜோத்புர் மற்றும் ஜால்வர் பகுதிகளில் திடீரென நூற்றுக்கணக்கான காக்கைகள் செத்து மடிந்ததால் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஒருவாரத்தில் 300 காக்கைகளும் 52 மயில்களும் இறந்தன.மயில்கள் இறந்ததற்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் ராஜஸ்தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
ஜால்வர் வனத்துறையினர் காக்கைகள் இறந்தது குறித்து அரசுக்கு எச்சரிக்கை அறிக்கையை அளித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் விலங்குகளோ பறவைகளோ இறந்து கிடந்தால் தகவல் தெரிவிக்க அதிகாரிகள் தொலைபேசி உதவி எண்களை அறிவித்துள்ளனர்.
Comments