கர்நாடக அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்
கர்நாடக அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடாகவின் Shivamogga பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக பொதுச் செயலாளர் அருண்சிங் மற்றும் முதலமைச்சர் எடியூரப்பா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
அப்போது மாநில அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் சங்கராந்திக்கு கர்நாடகா வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் கலந்தாலோசித்து அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments