இந்தியா - வங்கதேச எல்லையில் 200 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு...

0 6597
இந்தியா - வங்கதேச எல்லையில் 200 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு...

இந்தியாவையும், பங்களாதேஷையும் இணைக்கும் வகையில் கரீம்கஞ்ச் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 200 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய கரீம்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் மயங்க் குமார், கடந்த டிசம்பர் மாதம் 28ந்தேதி தில்வார் ஹொசைன் என்பவர் கடத்தப்பட்டதாகவும் அவரை விடுவிக்க 5லட்சம் ரூபாய் தேவை என்று கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்த தாகவும் கூறினார்.

இந்நிலையில் அவரை மீட்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்ட போது இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த சுரங்கப்பாதை சர்வதேச கடத்தலுக்கோ, கடத்தல் சம்பவத்துக்கோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments