மும்பைத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி லக்வியை கைது செய்தது பாகிஸ்தான் அரசு
பிரான்ஸ் நிதி கண்காணிப்பு அமைப்பான FATF கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு மும்பைத்தாக்குதல் வழக்கில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஜாகிர் உர் ரஹ்மான் லக்வியை அவசரமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
தீவிரவாதத்திற்கு நிதித் திரட்டியதாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ள FATF கூட்டங்களில், பாகிஸ்தான் அரசு தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக காட்டிக் கொள்ள இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கை வழக்கமான கண்துடைப்பு என்று இந்தியா விமர்சித்துள்ளது. தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் வைத்து சர்வதேச நிதியைத் தடை செய்யப்போவதாக பிரான்ஸ் நிதிக் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
Comments