திருவனந்தபுரம் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சிவபெருமானின் சிலை!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடற்கரையில் மிகப்பெரிய சிவபெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் இதனை பெரும் திரளாக பார்வையிட்டு வணங்குகின்றனர். அங்குள்ள கோவளம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆழிமலா சிவன் கோவிலில் இந்த சிவபெருமானின் பிரம்மாண்டமான கற்சிலை வைக்கப்பட்டுள்ளது.
கங்காதர சிவ ரூபம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிற்பத்தை செதுக்கும் பணி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 2020ம் ஆண்டு இறுதியில் நிறைவு பெற்றுள்ளது.
Comments