காவேரி-குண்டாறு இணைப்பால் ராமநாதபுரத்தில் இனி தண்ணீர் பஞ்சம் வராது - முதலமைச்சர்

0 3431
காவேரி-குண்டாறு இணைப்பால் ராமநாதபுரத்தில் இனி தண்ணீர் பஞ்சம் வராது - முதலமைச்சர்

காவேரி- குண்டாறு இணைப்பு திட்டத்தால் 4 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் பஞ்சம் இல்லா மாவட்டமாக மாறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராமநாதபுரம் மாவட்டம் தஞ்சை,நாகை மாவட்டங்களை போல் விவசாயம் பெறுகும் என்றார்.

உலகளவில் பல கோடி மக்களை பாதித்த கொரோனா தொற்று நோயை தமிழக அரசு சிறப்பான நடவடிக்கையினால் கட்டுப்படுத்தியதாக கூறிய முதலமைச்சர், மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments