இந்திய படைகளை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் அழிக்கப்படுவார்கள்- முப்படைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

0 3771
இந்திய படைகளை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் அழிக்கப்படுவார்கள்- முப்படைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

ந்திய படைகளை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் அழிக்கப்படுவார்கள் என்று முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

அருணாச்சலபிரதேசம் மற்றும் அசாமில் சீனாவை ஒட்டி உள்ள எல்லையில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

அருணாச்சலபிரதேச எல்லையின் கடைசி முனையான திபாங் பள்ளத்தாக்கு, லோகித் பிராந்தியங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு ராணுவத்தினருடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், இந்திய படைகளை தவிர உலகில் வேறு எவரும், இது போன்ற சவாலான பிராந்தியத்தில் காவல் பணியில் ஈடுபட முடியாது என்றார்.

வீரர்களின் கடமை உணர்ச்சி அளப்பரியது என்ற அவர், பணியையும் கடந்து நாட்டின் மேல் கொண்ட பற்றினால் வீர ர்கள் கடும் குளிரிலும் எல்லையை காப்பதாக பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments