பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜு

0 7303
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜு

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் கூட, நியாயவிலை கடைகளில் பொங்கலுக்கான பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வோர், 19-ம் தேதிக்கு பிறகு, சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளை அணுகி பரிசு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments