முத்தலாக் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமின் வழங்கலாம் - உச்ச நீதிமன்றம்
முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படும் நபர்களுக்கு முன்ஜாமின் வழங்க தடை எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கணவன் முத்தலாக் கூறிய விவகாரத்தில், குறிப்பிட்ட பெண்ணை அவரது மாமியார் கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், மாமியாருக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி,இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
இந்த விவகாரத்தில் மாமியாருக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்ற கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
அதே நேரம் பாதிக்கப்படுவதாக கூறப்படும் பெண்ணின் வாக்குமூலத்தை பெற்ற பிறகே, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமின் வழங்கலாமா என்பதை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments