முந்தைய ஆண்டை விட டாட்டா பயணிகள் வாகன விற்பனை 84 விழுக்காடு அதிகரிப்பு

0 1749
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களின் விற்பனை டிசம்பரில் முந்தைய ஆண்டைவிட 84 விழுக்காடு அதிகரித்துள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களின் விற்பனை டிசம்பரில் முந்தைய ஆண்டைவிட 84 விழுக்காடு அதிகரித்துள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 2019 டிசம்பரில் 12 ஆயிரத்து 785 பயணிகள் வாகனங்களை விற்றுள்ள நிலையில், 2020 டிசம்பரில் விற்பனை 23 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது.

டாட்டா நிறுவனம் டிசம்பரில் ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் 53 ஆயிரத்து 430 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 21 விழுக்காடு அதிகமாகும்.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தள்ளுபடி, கடனுதவித் திட்டங்கள் அறிவித்ததே விற்பனை அதிகரிக்கக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments