காவிரி ஆற்றின் பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த முதற்கட்டமாக ரூ.224 கோடி ஒதுக்கீடு

0 1047
காவிரியாற்றின் பாசன பகுதிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முதற்கட்டமாக 224 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியாற்றின் பாசன பகுதிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முதற்கட்டமாக 224 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ள பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் காவிரி ஆற்றின் உபவடி நிலத்தை புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணிகளுக்காக 3384 கோடி ரூபாய் நிதி வழங்க நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக முதற்கட்டமாக 224 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

டெல்டா பகுதி முழுவதும் தண்ணீர் செல்லும் வகையில் கட்டமைப்பு மேம்படுத்தப்படவுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு வருவதற்குள் போர்கால அடிப்படையில்  பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments