கங்கணா ரணாவத் செய்தது கடுமையான விதிமீறல்.. மும்பை நீதிமன்றம்

0 3242
நடிகை கங்கணா ரணாவத் தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒன்றிணைத்துச் சட்டவிரோதக் கட்டுமானப் பணிகளைச் செய்தது கடுமையான விதிமீறலாகும் என மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகை கங்கணா ரணாவத் தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒன்றிணைத்துச் சட்டவிரோதக் கட்டுமானப் பணிகளைச் செய்தது கடுமையான விதிமீறலாகும் என மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பையில் கார் என்னுமிடத்தில் உள்ள 16 மாடிக் கட்டடத்தின் ஐந்தாவது தளத்தில் நடிகை கங்கணா ரணாவத் மூன்று வீடுகளை வாங்கியுள்ளார். இந்த மூன்று வீடுகளிலும் சுவர்களை இடித்து, ஒன்றாக இணைத்ததற்காக அவருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்பிருந்த திட்டப்படி வீட்டை மாற்றியமைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், சட்டவிரோதக் கட்டுமானங்கள் இடித்து அகற்றப்படும் என்றும் கூறி மற்றொரு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்துக் கங்கணா ரணாவத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, கட்டடத்தில் அனைவருக்கும் பொதுவான பரப்புகளை இணைத்து வீடாக மாற்றியது கடுமையான விதிமீறலாகும் எனக் கூறித் தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments