இடிக்கப்பட்ட இந்து கோவில் மீண்டும் கட்டப்படும்-பாகிஸ்தான் மாகாண அரசு அறிவிப்பு

0 2362
மத வெறியர்களால் இடிக்கப்பட்ட இந்து கோவிலை மீண்டும் கட்டித் தருவோம் என பாகிஸ்தான் மாகாண அரசு தெரவித்துள்ளது.

மத வெறியர்களால் இடிக்கப்பட்ட இந்து கோவிலை மீண்டும் கட்டித் தருவோம் என பாகிஸ்தான் மாகாண அரசு தெரவித்துள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்தூன்குவா மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் இருந்த கோவில் கடந்த வாரம் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக 350 பேர் மீது மாகாண போலீசார் தேச விரோத குற்ற வழக்கு பதிவு செய்து அவர்களில் சிலரை கைதும் செய்துள்ளனர்.

இந்த நிலையில் கோவிலை மீண்டும் கட்டுவதற்கான அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் மஹ்மூத் கான் தெரிவித்துள்ளார்.

கோவில் இடிப்பு தொடர்பான போலீசின் குற்றப்பத்திரிகையில் உள்ளூர் மதகுரு மவுலானா முகம்மது ஷரீப் என்பவர் தலைமையில் 400 பேர் திரண்டு சென்று கோயிலை இடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments