பாங்காங் ஏரியில் அதி நவீன ரோந்து படகுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது இந்திய ராணுவம்
பாங்காங் ஏரியில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துவதற்கான அதிவிரைவுப் படகுகள் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடன் 8 மாதங்களாக பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில முக்கிய எல்லைப் பகுதியான பாங்கோங் ஏரிக்கரையில் சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க 65 கோடி ரூபாய் செலவில் 12 நவீன அதிவிரைவு ரோந்து படகுகளுக்கு அரசு நிறுவனமான கோவா ஷிப்யார்டிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
பாங்கோங் ஏரி இப்போது உறைந்து விட்டதால், வரும் மே மாதம் இந்த படகுகள் அங்கு ரோந்துப் பணியை துவக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments